ஆஸ்கார் விருதை வெல்லுமா ‘நாட்டு நாட்டு‘ பாடல்?

ஆர்ஆர்ஆர் தெலுங்கு படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு….‘ பாடல் சிறந்த பாடலாக ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் தேர்வு செய்யப்பட்டதாக தேர்வு கமிட்டி இன்று(ஜன.25) அறிவித்துள்ளது. ‘ஹாலிவுட் திரைப்படங்களுக்கான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, 2023 மார்ச 12-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இதில் ஆஸ்கர் விருதுக்காக பல்வேறு பிரிவுகளில் போட்டிக்கு அனுப்பப்பட்ட படங்களின் தேர்வு பட்டியல் இறுதி செய்யப்பட்டு தேர்வு கமிட்டி இன்று அறிவித்தது. இதில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய தெலுங்கு திரைப்படமான, ஆர்ஆர்ஆர் படத்தில், கீரவாணி இசையில் இடம் பெற்ற, ‘நாட்டு நாட்டு…‘ பாட்ல் சிறந்த ‘ஒரிஜினல் ஸாங்‘ எனப்படும் , பாடலுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இது தவிர சிறந்த ஆவணப்படமாக எலிபெண்ட் விஸ்பர்ஸ் படமும் தேர்வாகி உள்ளன. ஆல் தட் ப்ரீத்ஸ் என்னும் ஆவண திரைப்படம் ஆஸ்கர் 2023-ம் ஆண்டு போட்டிக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆர்ஆர்ஆர் படம் சிறந்த பாடல் மற்றும் சிறந்த இசை என 2-பிரிவுகளின் கீழ் தேர்வு, ஆவண திரைப்படம் மற்றும் ஆவண குறும்படம் என இந்த முறை இந்திய படங்கள் 4-பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியுள்ளன.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்