ஆபாச காட்சிகளில் நடிக்கமாட்டேன் – நடிகை பிரியாமணி விளக்கம்

தமிழ் சினிமாவில் 20 காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரியாமணி. இவர் தமிழில் ‘பருத்திவீரன்‘ படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் இவர் நடித்த ‘முத்தழகு‘ கதாபாத்திரம் இன்னும் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். இதனைத் தொடர்ந்து ‘அது ஒரு கனா காலம், மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ரத்த சரித்திரம், ராவணன், சாருலதா‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். அதன்பின் 2017-ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை  திருமணம் செய்து கொண்டு சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கொண்டும், நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்து கொண்டு வருகிறார்.  இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை பிரியாமணி பேசும்போது, “நான் படுக்கை அறை காட்சியிலோ, நடிகருடன் நெருக்கமாக இருக்கும் காட்சியிலோ நடிக்க மாட்டேன். காரணம் என் படத்தை குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பார்ப்பார்கள், படம் பார்க்கும் போது அவர்களின் முகம் சுளிக்கக்கூடாது. அதுமட்டுமில்லாமல் அப்படி நடித்தால் என் கணவருக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும்“ என கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்