கன்னட திரையுலகில் அறிமுகமாகி இப்போது தென்னிந்திய சினிமாவிலும் ஹிந்தி சினிமாவிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது அனிமல் மற்றும் புஷ்பா 2 படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மாறி மாறி பயணித்து வருவதால் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் வீடு வாங்கி உள்ளாராம்.
அதாவது, பெங்களூரு, கூர்க், ஐதராபாத், கோவா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் விலையுயர்ந்த சொகுசு வீடுகளை அவர் புதிதாக வாங்கி இருப்பதாக சில தினங்களாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பதிலளிக்கும் விதமாக, “இது போன்ற வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என தெரியவில்லை. ஆனால் இவை உண்மையாக இருந்தால் நன்றாக இருக்கும்“ என நடிகை ராஷ்மிகா மந்தனா குறிப்பிட்டுள்ளார்.










