இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவர் தற்போது ‘இந்தியன் 2‘ மற்றும் ‘கேம் சேஞ்சர்‘ என இரு திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2 –வில் கமலை கதாநாயகனாக வைத்து இயக்கி வருகிறார். கேம் சேஞ்சர் என்னும் படத்தில் தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ராம்சரணை வைத்து இயக்கி வருகிறார்.
அண்மையில் தான் இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் இணைந்து ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, சுனில் என பல முன்னணி பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ‘கேம் சேஞ்சர்‘ படத்திற்காக இயக்குனர் ஷங்கர் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்காக ரூ.50 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.










