‘அகிலன்‘ ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு

நடிகர் ஜெயம் ரவி ‘பொன்னியின் செல்வன்‘ படத்திற்கு பிறகு கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ‘அகிலன்‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் இணைந்து பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்து வரும் நிலையில், சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் துறைமுகம் தொடர்பான கதைக்களத்தில் அதிரடி ஆக்ஷன்  படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்‘ படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது ‘அகிலன்‘ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மார்ச் 10-ம் தேதி படம் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்