குத்துச்சண்டை வீராங்கணையான ரித்திகா சிங், சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச்சுற்று‘ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே‘ படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ‘கிங் ஆப் கோதா‘ என்னும் படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் தயாராகும் ஒரு படத்தில் சிலம்பாட்ட வீராங்கணையாக நடிக்கிறார்.
தன்னை கொடுமைப்படுத்தியவர்களை சிலம்பத்தை கொண்டே பழிவாங்குகிற மாதிரியான கதை இது. இப்படத்திற்காக ரித்திகா சிங் முறைப்படி சிலம்பம் கற்று வருகிறார். இந்த படம் ஓடிடி வெளியீட்டுக்காக தயாராகி வருகிறது.










