சமீபகாலமாக முன்னணி நடிகர்-நடிகைகள் வெப்தொடர்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வரிசையில் தற்போது நடிகர் அதர்வாவும் ‘மத்தகம்‘ என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார். இதில் மணிகண்டன், நிகிலா விமல், டைரக்டர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, வடிவுக்கரசி, மூணாறு ரமேஷ், ரிஷிகாந்த் உள்ளிட்ட மேலும் பலர் நடித்து இருக்கிறார்கள்.
இந்த தொடரை பிரசாத் முருகேசன் டைரக்டு செய்துள்ளார். அவர் கூறும்போது, “ மத்தகம் என்பது யானையின் முன் நெற்றியை குறிக்கும் சொல் ஆகும். யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தை தன்னை காத்துக்கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும். அதை தொடருக்கு தலைப்பாக்கி உள்ளோம்.
30 மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் சுவராசியமாக இந்த தொடரில் சொல்லப்பட்டு உள்ளது. ஒரு இரவில் நாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தை படம் பிடித்தது சவாலானதாக இருந்தது. ரசிகர்களுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும் “ என்றார்.










