கடந்த 2021-ம் ஆண்டு நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் மாமல்லபுரத்தில்; விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு காரில் சென்னை திரும்பும்போது கிழக்கு கடற்கரை சாலை அருகே விபத்தில் சிக்கினார். இதில் யாஷிகா படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
ஆனால் அவரது தோழி வள்ளி பவனி ஷெட்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தின் வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
நடிகை யாஷிகா நேரில் சென்று ஆஜரானார். விசாரணைக்கு பிறகு அவர் மீண்டும் வருகிற ஜூலை மாதம் 20-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் காரை ஓட்டி வந்தது யாஷிகாதான் என்றாலும் அவர் விபத்தின்போது மது அருந்தவில்லை என்று சான்றிதழ் பெற்றிருப்பதால் அவருக்கு பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிறது.










