வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். மேலும் வெற்றிலை பசியை தூண்டக் கூடியது. வெற்றிலையை உணவுக்கு பின் உண்டால் நல்ல செரிமானம் ஆகும். வெற்றிலையுடன் மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் கஷாயம், உணவு செரிமானத்துக்கும், சளி, கபம் போன்றவற்றுக்கு அருமருந்து. வெற்றிலையை மெல்லுவதால் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, வயிற்றில் சளி உடைய பொருளை அதிகரிக்கும். இதனால் அசிடிட்டி ஏற்படாமல் தடுக்கப்படும். மேலும் வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.










