விக்ரம் பிரபுவின் புதிய பட அப்டேட் வெளியானது

விக்ரம் பிரபுவின் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் ‘டாணாக்காரன்‘. இது அவருக்கு நல்ல படமாக அமைந்தது. அதன்பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது ‘பாயும் ஒளி நீ எனக்கு‘ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் அடுத்து இப்படம் வெளியாக உள்ளது. இதுதவிர ‘ரெய்டு‘ படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் இந்தாண்டு வெளிவருகிறது. பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தில் விக்ரம் பிரபு கேரக்டர் பெரிய அளவில் இடம்பெறும் என்கிறார்கள். இந்நிலையில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து அவர் நடிக்கும் படம் ‘இறுகப்பற்று‘.

இப்படத்தை எலி, பட்டா பட்டி, தெனாலிராமன் படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்குகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் விதார்த், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்பட பலர் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்