பொங்கல் என்றாலே ஜல்லிக்கட்டு தான். துள்ளிக்குதித்து வரும் காளைகள், அதனை அடக்கும் மாடுபிடி வீரர்கள். இந்த ஜல்லிக்கட்டு நமது கலாச்சாரம், பாரம்பர்யம் சார்ந்ததாக இருந்தாலும், அதனை தடை செய்வதற்கு, நேரடியாகவும் மறைமுகமாகவும், எத்தனையோ சதி வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி விட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு விமர்சையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த வகையி,ல் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி, 17 – இன்று உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துவங்கியது. இதனை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
துள்ளிக்குதித்து சீறி வரும் காளைகளை இளைஞர்கள் அடக்கி ஒரு பக்கம் பரிசு பெற்று வருகின்றனர். இன்னொரு பக்கம் காளையர்களிடம் சிக்காமல் தண்ணி காட்டிவிட்டு, தன் எஜமானர்களுக்கு பரிசுகளை வாரிக்குவித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறது காளைகள்.








