கர்நாடகாவை உலுக்கிய ‘காந்தாரா’ படத்திற்கு ஆஸ்கர் விருது?

பிரபல கன்னட நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி நடித்திருக்கும் திரைப்படம்  தான் இந்த ’காந்தாரா’. இந்த படம் கன்னடத்தில் செப்டம்பர்-30-ம் தேதி வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. பின்பு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு அக்டோபர்-15-ம் தேதி வெளியாகி இருந்தது.

பார்க்காத கதைகள், அதிக ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு, எதிர்பார்க்க முடியாத திருப்பங்கள் என ஒரு படம் அமையும்போது அது மொழிகளைக் கடந்து, பழக்க, வழக்கங்களை கடந்து ரசிக்க வைக்கும். அதற்கு இந்த ’காந்தாரா’ ஒரு சிறந்த உதாரணமாய் அமைந்திருந்தது.

இந்த திரைப்படத்தில் நர்த்தகர்கள் படும் வேதனைகளும், கஷ்டங்களும் காட்டப்பட்டுள்ளன.  இந்தத் திரைப்படத்தின் வாயிலாக தெய்வ நர்த்தகர்களின் கஷ்டங்களை புரிந்துகொண்ட கர்நாடக அரசு, 60 வயதிற்கு மேற்பட்ட தெய்வ நர்த்தகர்களுக்கு மாதம்தோறும் 2000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.  இது ’காந்தாரா’ திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றி என்று திரைப்பட ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கேஜிஎப் படங்களுக்குப் பிறகு கன்னட சினிமா மீது அனைத்து திரைப்பட ரசிகர்களுக்கும் ஒரு மரியாதை ஏற்பட்டு இருந்தது.  தற்போது அந்த வரிசையில் ’காந்தாரா’ திரைப்படமும் இடம் பிடித்திருக்கிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருக்கும் 95-வது ஆஸ்கர் விருது விழாவில் இந்த படமும் ஆஸ்கர் விருத்துக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்