‘விடுதலை -2‘ தாமதத்திற்கு இது தான் காரணம் – விளக்கமளித்த வெற்றிமாறன்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘விடுதலை‘. இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை பவானி ஸ்ரீ நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து விஜய்சேதுபதி, சேத்தன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியான ‘விடுதலை-1‘ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பிரபலங்கள் பலரும் பாராட்டி வந்தனர். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ‘விடுதலை 2‘ தாமதமாக என்ன காரணம் என்று இயக்குனர் வெற்றிமாறன் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ பனி பொழிவில் கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்க 100 நாட்கள் முயற்சி செய்தோம். ஆனாலும் முடியவில்லை. நான் படமாக்கும் விதத்தை பார்த்தால், நான்கு ஆண்டுகள் ஆனாலும் முடியாது என பிறகுதான் தெரிந்தது. இதன் காரணமாக செயற்கை பனிபொழிவை உருவாக்கி படமாக்கினோம். இதனால் தான் ‘விடுதலை 2‘ முடிக்க காலதாமதம் ஆனது “ என்று கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்