தனுஷ் உடன் இணைந்த அஜித்தின் மகள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது தனது 50-வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதில் அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல முன்னணி திரைப் பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னை ஈ.சி.ஆரில் 500 வீடுகள் கொண்ட பிரமாண்டமான வடசென்னை அரங்கம் அமைத்து விறுவிறுப்பாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

நடிகர் ரஜினியின் ‘ஜெயிலர்‘ படம் வெளிவந்த பிறகே தனுஷ் 50-வது படங்களின் அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ‘என்னை அறிந்தால், விஸ்வாசம்‘ உள்ளிட்ட படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்து பிரபலமான அனிகா சுரேந்திரன், தனுஷ் 50-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அனிகா சுரேந்திரன் இப்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்