ரஜினிக்கு நன்றி சொல்லிய இயக்குனர் நெல்சன்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி தற்போது ‘ஜெயிலர்‘ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகை தமன்னா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் இயக்குனர் நெல்சன் பேசியதாவது, “ இது என்னுடைய 4-வது படம் ஆனால் இது என்னுடைய முதல் ஆடியோ லாஞ்ச். தலைவர் பாராட்டும்போது கிண்டலாக பேசுகிறாரா அல்லது உண்மையாக பேசுகிறாரா என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை. படத்தில் மிகப்பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள். சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் போன்ற கட்டுப்பாடு மற்றும் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் ஒரு பக்கம் உள்ளனர். மறுபக்கம் விடிவி கணேஷ் போன்ற கட்டுப்பாடு இல்லாத நடிகர்கள். இரண்டையும் நிர்வகிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ரஜினிகாந்த் சார் எனக்கு உதவினார்… நன்றி சார் “ என்று நெல்சன் பேசியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்