சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜ் – நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

நடிகர் மற்றும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘மாமன்னன்‘. இப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். அதில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர். இப்படத்தை ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இப்படம் நடிகர் ரஜினிக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தை பார்த்த ரஜினி இயக்குனர் மாரி செல்வராஜை அழைத்து பாராட்டினார். பின்னர் தனது டுவிட்டரில் “ சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள் ‘ என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள மாரி செல்வராஜ், “ என் முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும், கர்ணனையும் பார்த்த பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களுக்கு என் இதயத்திலிருந்து நிரம்பி வழியும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன் “ என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்