மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய நடிகர் தனுஷ்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்‘ படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சந்தீப் கிஷன், சிவராஜ் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக தனுஷ் தாடி, மீசை, நீண்ட முடியுடன் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகர் தனுஷ் திருப்பதி கோவிலுக்கு தனது பெற்றோர் மற்றும் மகன்கள் யாத்ரா-லிங்காவுடன் சென்று மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார். இது குறித்த சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் இப்படத்தையடுத்து, ‘ராஞ்சனா‘ மற்றும் ‘அட்ராங்கி ரே‘ போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் புதிய படத்தில் இணைந்துள்ளார்.  கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ‘தேரே இஸ்க் மேன்‘ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் 2024-ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்