இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள திரிஷாவின் ‘தி ரோடு‘

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பொன்னியின் செல்வன்‘ முதல் மற்றும் இரண்டாம் பாகம் சினிமாவில் இவருக்கு அடுத்த கட்ட முன்னேற்றத்தை கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிக்கும் ‘லியோ‘ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ‘தி ரோடு‘ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் அருண் வசீகரன் இயக்கி வரும் நிலையில், இப்படம் ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாகி வருகிறது. இதில் திரிஷாவுடன் இணைந்து டான்சிங் ரோஸ் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், பிரசன்னா, லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் இந்த படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டுமிட்டுள்ளார்கள். இந்த நிலையில் ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து தொடங்க உள்ள புரொமோஷன் நிகழ்ச்சிகளில் திரிஷாவும் கலந்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார்.

இந்த படம் மதுரையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தின் இயக்குனரான அருண் வசீகரன், விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்