‘மாவீரன்‘ டிரைலர் தேதி வெளியீடு

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘மாவீரன்‘. இதில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது. தெலுங்கில் ‘மாவீருடு‘ என்ற பெயரில் வெளியாகிறது. இந்த திரைப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

சமீபத்தில் ‘மாவீரன்‘ படத்தில்  சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் ‘மாவீரன்‘ படத்தின் டிரைலர் நாளை (ஜூலை 2) வெளியாகும் என புதிய வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்