20 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியடைந்தது. இந்நிலையில் இவர் கடந்தாண்டு மணிரத்ரனம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்‘ படத்தில் நடித்திருந்தார்.
இந்தப்படம் 2 பாகமாக எடுக்கப்பட்ட நிலையில் கடந்தாண்டு இறுதில் முதல் பாகமும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி இருந்தது. இப்படத்தின் மூலம் மீண்டும் பிரபலமான இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தது. அந்த வகையில் தற்போது விஜய்யுடன் இணைந்து ‘லியோ‘ படமும், அடுத்ததாக அஜித்தின் ‘விடாமுயற்சி‘ படத்தில் நடிக்க உள்ளார்.
மேலும் ‘தி ரோட்‘ என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்து வரும் நிலையில், ‘ராம்‘ என்ற மலையாளப் படத்திலும் நடிக்கிறார்.
இதனைத்தொடர்ந்து தெலுங்கு முன்னணி நடிகரான மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே 2006-ல் வெளியான ‘ஸ்டாலின்‘ என்ற படத்தின் மூலம் சேர்ந்து நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படத்தை கல்யாண் கிருஷ்ணா இயக்குகிறார். இதில் சிரஞ்சீவி மனைவியாக திரிஷா நடிக்கிறார். மேலும் இப்படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘புரோ டாடி‘ என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் தயாராகிறது.










