பிரபல நடிகரின் மகளுக்கு விரைவில் திருமணம்

தமிழ் திரையுலகில் எண்பது மற்றும் தொண்ணூறுகளில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜூன். இவரின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். மேலும் இவர் ஆக்ஷன் கிங் என்று அனைத்து ரசிகர்களாலும் அன்போடு அழைக்கப்பட்டவர்.

இவர் கதாநாயகனாக நடிப்பதை விட்டுவிட்டு தற்போது வில்லன் வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ‘ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா, நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘பட்டத்து யானை‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தம்பி ராமையா மகன் உமாபதி மற்றும் ஐஸ்வர்யா நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்களாம். இவர்கள் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்