விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் ‘லியோ‘ அப்டேட்

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ‘ படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து பிரியா ஆனந்த், அர்ஜூன், மிஷ்கின் , சஞ்சய் தத், கவுதம் மேனன், மன்சூரலிகான் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றிய ஒரு அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். சற்றுமுன் ரெடியா என அவர் டுவீட் போட்டது முதலே விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாட்டத்தை தொடங்கினார்கள். வரும் ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பாடலை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

‘ நா ரெடி….‘ என குறிப்பிட்டுள்ள அந்த பாடல் பற்றிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். மேலும் இப்பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கலாம் என கூறப்படுகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்