நடிகர் கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ஷங்கர் இயக்கி வரும் நிலையில், தற்போது இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகிறது.
இப்படம் இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் தனது 234-வது படத்தில் நடிக்க உள்ளார் நடிகர் கமல்.
தற்போது இப்படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் திரைக்கதை சம்பந்தப்பட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.
இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.அதோடு ஹிந்தி நடிகை வித்யா பாலன் கமலுக்கு ஜோடியாக நடிக்கும் நிலையில் நயன்தாரா அல்லது திரிஷா ஆகிய இருவரில் ஒருவர் இன்னொரு நாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.










