‘என் அப்பா தான் எனக்கு மிகப்பெரிய ஊக்கம்‘ – நடிகர் ராம் சரண் நெகிழ்ச்சி!

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்து வெளியான ‘ஆர்ஆர்ஆர்‘ படம் பல்வேறு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்‘ படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் நடிகர் ராம்சரண். அந்த நிகழ்வில் அவரது தந்தை மற்றும் நடிகர் சிரஞ்சீவி உழைப்பு குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், “ என் தந்தைக்கு 68 வயதாகிறது. ஆனால் இப்போது கூட அவர் நான்கு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் அவரும் ஒருவராக உயர்ந்துள்ளார்.

தினமும் காலை 5.30 மணிக்கு ஒர்க் அவுட் செய்துவிட்டு அதன் பிறகு தான் அவர் படப்பிடிப்புக்கு செல்வார். இந்த வயதிலும் அவர் இவ்வளவு உற்சாகமாக இருப்பது தான் எனக்கு இன்னும் கடுமையாக உழைக்க மிகப் பெரிய ஊக்கம் தருகிறது என்று நடிகர் ராம்சரண் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்