இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள ‘தங்கலான்‘ படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விக்ரம். பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘தங்கலான்‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். இதில் இவருடன் இணைந்து மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்து வரும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த கிளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளது.

இந்த படம் 19-ம் நூற்றாண்டில் கே.ஜி.எப் பகுதிகளில் வாழ்ந்தவர்களின் கதை. அப்போது அவர்கள் சந்தித்த இன்னல்களை குறித்து இப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த படத்திற்காக கடந்த 6,7 மாதங்களாக விக்ரம் வேறு எந்த படங்களிலும் நடிக்க செல்லவில்லை. 105 நாட்கள் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே உள்ளது. மேலும் உலகத் தரத்தில் இந்த படம் உருவாகி வருகிறது என்று கூறியுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்