200 கோடி ரூபாய் வசூலித்து, சாதனைப் படைத்த ‘தி கேரளா ஸ்டோரி‘ – ஆச்சரியத்தில் திரையுலகினர்!

பாலிவுட் தயாரிப்பாளர் விபுல்ஷா தயாரிப்பில் மேற்குவங்க இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘தி கேரளா ஸ்டோரி‘. கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்ட இந்த படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் வட மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு இந்த படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் 37 நாடுகளில் திரையிடப்பட்டது.

இந்நிலையில், படம் வெளியாகி 18 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் உலகம் முழுவதும் படம் 203 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம் 200 கோடியை தாண்டி வசூலித்திருப்பது திரையுலகினர் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்