ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்‘ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்‘. இதில் இவருடன் இணைந்து மீனாட்சி, சத்யராஜ், ரோபோ சங்கர் மற்றும் ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரித்து வருகின்றனர். இது காமெடி கலந்த திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று இப்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று (மே 23) நடைபெற்ற பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி வருகிற ஜூலை மாதம் திரையரங்குகளில் படம் வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால் தேதியை அறிவிக்கவில்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்