காதலனை அறிமுகப்படுத்திய நடிகை தீபிகா..

டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமான தீபிகாவிற்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர். அவர் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து வருகிறார். தீபிகாவின் நண்பரான ராஜ் வெற்றி பிரபுவும் இதே தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்றைய தினம் தீபிகாவுக்கும் ராஜ் வெற்றி பிரபுவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தீபிகா தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, தீபிகாவின் காதலர் ராஜ் வெற்றி பிரபு தான் என ரசிகர்கள் சந்தேகித்து வந்த நிலையில் நிச்சயதார்த்த அறிவிப்பை வெளியிட்டு தீபிகா அதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்