இயக்குனர் சுராஜ் ‘தலைநகரம், மருதமலை, படிக்காதவன்‘ போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஆனால் அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த வடிவேலு நடித்த ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்‘ படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு இயக்குனர் சுராஜ் பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, நடிகர் ஜெயம்ரவியை வைத்து இயக்கிய ‘சகலகலா வல்லவன்‘ திரைப்படம் ஏன் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று நினைக்கிறீர்கள் என அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அந்த படத்தின் கதாநாயகன் தேர்வே தவறாக அமைந்தது. முதலில் நானும், தனுஷூம் அந்த கதையை பேசினோம். அவருக்கு அந்த கதாபாத்திரம் பொருத்தமாக அமைந்திருக்கும்.
ஆனால் ஒரு சில காரணங்களால் தனுஷ் நடிக்க முடியவில்லை. அந்த இடத்தில் ஜெயம் ரவி வைத்தது என் தவறான முடிவு. அவருக்கு அந்த கதாபாத்திரம் சரியாக அமையவில்லை என்று தெரிவித்துள்ளார்.










