இயக்குனர் கார்த்திக் சுப்பராஜிற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்த படம் ‘ஜிகர்தண்டா‘. இதில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோர் நடித்து இருந்தனர்.
இப்படத்திற்காக துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் பாபி சிம்ஹா. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்‘ என்ற பெயரில் இயக்கி வருகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ஆக்ஷன் கலந்த காமெடி படமாக உருவாகிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.










