தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் ‘பர்ஹானா‘ – பட காட்சிகள் ரத்து

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடித்து வெளியாகியுள்ள படம் ‘பர்ஹானா‘. டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

ரிலீஸ்க்கு முன்பே ஒரு மதத்திற்கு எதிரான படம் என்று பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் படக்குழுவினர் இப்படம் எந்த மதத்திற்கும் எதிரான படம் இல்லை என்று விளக்கம் தெரிவித்தும் இன்னும் இந்த சர்ச்சை முடிவுக்கு வரவில்லை.

நேற்று திருவாரூரில் உள்ள தைலம்மை திரையரங்கில் இந்த படத்தை மாலை 6 மணி காட்சி திரையிடப்பட்ட இருந்த நிலையில் இந்த படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக திருவாரூரில் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் தெரிவித்திருந்தனர்.

அதனால் போலீஸார் திரையரங்க வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ‘பர்ஹானா‘ படத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதால், திருவாரூர் தைலம்மை திரையரங்கில் இந்த படத்திற்கான காட்சிகள் ரத்து என்று தியேட்டர் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்