இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2‘ படத்தில் தற்போது கமல்ஹாசன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த வகையில் ‘நாயகன்‘ படத்துக்கு பிறகு மீண்டும் அவர்கள் இருவரும் கூட்டணி அமைக்கிறார்கள்.
முதன்முறையாக இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது இன்னொரு கதாநாயகியாக ஆண்ட்ரியாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு கமல் நடித்த ‘விஸ்வரூபம்‘, ‘விஸ்வரூபம் 2‘ மற்றும் ‘உத்தம வில்லன்‘ ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ள ஆண்ட்ரியா இந்த படத்தின் மூலம் நான்காவது முறையாக மீண்டும் கமலுடன் இணையப்போகிறார் என்பது உறுதியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவன விழாவில் கலந்துகொண்ட ஆண்ட்ரியா; தான் ஒரு தவறான நடிகருடன் உறவில் இருந்ததாகவும், அந்த நடிகர் என்னை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் காயப்படுத்தினார் என்று தெரிவித்திருந்தார்.
நடிகை ஆண்ட்ரியாவை இந்த அளவுக்கு கொடுமைபடுத்தியவர் நடிகர் கமலஹாசன் தான் என்று சில சினிமா ஊடகவியாளர்களும், இணையதளவாசிகளும் கூறி வந்தனர். ஆனால் தற்போது மீண்டும் கமல் படத்தில் ஆண்ட்ரியா நடிக்கவிருப்பது, நடிகர் கமல் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையற்றது என்பதை நீருபிக்கும் வகையில் உள்ளது.










