ராஜமவுலியின் அடுத்த படத்தின் புதிய தகவல் வெளியானது…!

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனைத்தொடர்ந்து ‘ஆர்ஆர்ஆர்‘ என்ற பிரமாண்ட படத்தை இயக்கினார். 1000 கோடி வசூலித்த இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு‘ என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்நிலையில் அடுத்தபடியாக மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். அமேசான் காடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக இயக்கிய ராஜமவுலி இந்த படத்தை மூன்று பாகங்களாக இயக்கப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இப்படம் இந்து கடவுளான அனுமனை மையமாகக் கொண்ட கதையில் உருவாக இருக்கிறதாம். இதுவரை ராஜமவுலி இயக்கிய படங்களை காட்டிலும் கூடுதல் பட்ஜெட்டில் இந்தப்படம் உருவாக இருப்பதாகவும் டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்