நயன்தாராவுடன் முதல் முறையாக ஜோடி சேரும் நடிகர் மாதவன்…!

தயாரிப்பாளர் சசிகாந்த் முதன்முறையாக இயக்கும் படம் ‘டெஸ்ட்‘. இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் வைத்து எடுக்கப்படுகிறது. இதில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில் இன்னொரு கதாநாயகியாக ராஷி கண்ணாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே ‘இமைக்கா நொடிகள்‘ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்தவர். இந்த படத்தில் அவர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் மாதவன் நடிக்க உள்ளார். அந்த வகையில் மாதவனும், நயன்தாராவும் முதன்முறையாக இப்போது தான் ஜோடி சேருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்