அதிமுக-வை ஆதரிக்கும் கஞ்சா கருப்பு…!

மானாமதுரை அருகே உள்ள கந்தசாமி முருகன் கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொண்டார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. அப்போது சாமி தரிசனம் செய்துவிட்டு அன்னதான நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார். இதையடுத்து மீடியாக்களை சந்தித்த கஞ்சா கருப்பு, இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது படப்பிடிப்பு இருந்ததால் என்னால் வர முடியவில்லை.

அதனால் தான் இந்த மண்டல பூஜையில் கலந்து கொண்டேன். இதையடுத்து சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி எடுக்க போகிறேன். அது எதற்காக என்றால், எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றத்தை அடுத்து முதல்வராக ஆக வேண்டும் என்பதற்காகத்தான் என்று கூறியுள்ள கஞ்சா கருப்பு, கூடிய சீக்கிரமே தமிழகத்தில் அதிமுகவின் நேர்மையான நல்லாட்சி நடைபெறும்.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்திருந்தால் கரண்ட் பில், வீட்டு வரி எல்லாம் அதிகரித்து இருக்காது. அதிமுகவில் தற்போது நடப்பது அங்காளி பங்காளி சண்டை. இது விரைவில் முடிவுக்கு வந்துவிடும். அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் ஆவார் என்று கஞ்சா கருப்பு தெரிவித்திருக்கிறார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்