இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜா முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் இசை கேட்டு மயங்கதாவர்கள் யாருமில்லை. மது போதைக்கு அடிமையகாதவர்கள் கூட இருக்கலாம், ஆனால் யுவனின் இசைக்கு அடிமையாகாதவர்கள் ஒருவருமில்லை. இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ள நிலையில், வெளிநாடுகளில் சென்று இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அந்த வரிசையில் முதலில் அமெரிக்கா சென்று அங்குள்ள நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தினார். அதைத்தொடர்ந்து சமீபத்தில் மலேசியாவில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
இந்நிலையில் அடுத்ததாக அவர் ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்சு மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். ‘ஹை ஆன் யுவன்-லைவ் இன் ஐரோப்பா‘ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, ஏப்ரல் 1 முதல்7 வரை ஓபர்ஹவுசன் (ஜெர்மனி), பாரிஸ் (பிரான்சு) மற்றும் லண்டன் (இங்கிலாந்து) ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் சங்கர் மகாதேவன், ஹரிசரண், ஆண்ட்ரியா ஜெரிமியா, திவாகர், ராகுல் நம்பியார், பிரேம்ஜி, ரஞ்சித், விஜய் யேசுதாஸ், சாம் விஷால், டிஜே, அஜய் கிருஷ்ணா, எம்.சி.சனா, ஆலாப், தன்வி ஷா, பிரியங்கா, ஹரிப்பிரியா மற்றும் விஷ்ணுபிரியா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட முன்னணி கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.










