சிம்பு நடித்த ‘பத்து தல‘ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலாக இருந்தனர். இந்நிலையில் நரிகுறவர் இனத்தைச் சேர்ந்த சிலருக்கு டிக்கெட் வாங்கியும் அவர்களை படம் பார்க்க உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த சம்பவத்தை ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் வெற்றிமாறன் தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது, “100 ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம்.
ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்காகும். எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.










