மீண்டும் தொடங்கும் ‘சங்கமித்ரா‘ படத்தின் படப்பிடிப்பு…!

சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் சுந்தர்.சி இயக்க ஆரம்பித்த படம் ‘சங்கமித்ரா‘. அந்த சமயத்தில் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்தனர். இதில் ஜெயம் ரவி, ஆர்யா இருவரும் கதாநாயகர்களாக நடித்து வந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

பெரிய பட்ஜெட்டில் துவங்கிய இந்த படம் ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை இப்போது லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளனர். ஆனால் படப்பிடிப்பு துவங்க தாமதமான காரணத்தால் ஜெயம் ரவி இப்படத்தை விட்டு விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நடிகர் விஷால் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார்.

ஆனால் விஷாலுக்கு குறைவான சம்பளம் பேசப்பட்டதால் இத்திரைப்படத்தில் இருந்து விஷால் விலகியதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது விஷாலுக்கு பதிலாக மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்