நடிகர் சிம்பு தற்போது ‘சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை‘ படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல‘ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையடுத்து படக்குழு புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராவடி‘ பாடல் வீடியோ இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.










