மலையாள நடிகையான அபிராமி தமிழில் அர்ஜுன் நடித்த ‘வானவில்‘ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிரபு, சரத்குமார், கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதற்கிடையே திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலான அபிராமி 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா நடித்த ’36 வயதினிலே‘ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது மலையாள படங்களில் நடித்து வரும் அபிராமி தமிழில் ‘மாறா, சுல்தான், நித்தம் ஒரு வானம்‘ படங்களில் நடித்து வந்தார். தற்போது அவர் மீண்டும் தமிழில் ‘பாபா பிளாக் ஷீப்‘ என்ற படத்தின் மூலம் கதையின் நாயகியாக நடிக்க இருக்கிறார்.
இப்படம் இயக்குனர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாக உள்ளது. இது பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் படம். இந்நிலையில் இப்படத்தை பற்றி இயக்குனர் ராஜ்மோகன் கூறியதாவது, “இது பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை சொல்லும் ஒரு அழகான டிராமா.
இப்படத்தில் ஒரு குழந்தையை பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அன்னை கதாபாத்திரம் இருந்தது. இந்த கதாபாத்திரத்திற்காக நடிகை அபிராமியை அணுகினேன், கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்து, நான் நடிக்கிறேன் என்று கூறினார். மேலும் தற்போது படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம், படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடக்கிறது“ என்றார் ராஜ்மோகன்.










