வெற்றிக்கரமாக 75 வது படத்தை நெருங்கிய லேடி சூப்பர் ஸ்டார்

நயன்தாரா நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளியான படம் ‘கனெக்ட்‘.  இப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. என்றாலும் மிக குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்த படம் லாபத்தை ஈட்டியது. தற்போது நயன்தாரா ஷாருக்கானுடன்  ‘ஜவான்‘ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் நயன்தாரா நேரடியாக பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிறார். தொடர்ந்து ஜெயம் ரவியுடன் இணைந்து ‘இறைவன்‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘தனி ஒருவன்‘ இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், நயன்தாராவின் 75வது படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்தை நாட் ஸ்டூடியோஸ், ஜீ ஸ்டூடியோஸ், டிரைடண்ட்  ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. புதுமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில், ஜெய் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தை குறுகிய காலத்தில் தயாரித்து இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்