தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்பர் 1 எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சி என்றால் அது ‘குக் வித் கோமாளி‘ நிகழ்ச்சி தான். முதல் மூன்று சீசன்களின் வெற்றியை தொடர்ந்து நான்காவது சீசனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் மணிமேகலை திடீரென இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து மற்றொரு காமெடி நட்சத்திரமான குரேஷியும் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து குரேஷி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்த நினைவுகளுக்கு நன்றி‘ என ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து அந்த டுவீட்டை குரேஷி தற்போது நீக்கிவிட்டு, ‘உடல் மண்ணுக்கு உயிர் குக் வித் கோமாளிக்கு‘ என புதிதாக ஒரு பதிவை டுவீட்டரில் வெளியிட்டுள்ளார். இதனால், அவர் உண்மையிலேயே நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டாரா? இல்லையா என்பது புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.










