கேஜிஎப் 2 படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பவார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இதைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘லியோ‘ படத்தின் மூலம் தமிழில் அவர் அறிமுகமாகிறார். இப்படத்தில் அதிரடியான வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார் சஞ்சய் தத். தற்போது விஜய்யுடன் அவர் இணைந்து நடித்து வரும் காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜிற்கு நேற்று (மார்ச் 14) பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இவருக்கு திரைபிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் அவருக்கு வாழ்த்து தெரிவித்து தனது சோஷியல் மீடியாவில் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில் என்னுடைய சகோதரர், மகன் எனது குடும்பத்தில் ஒருவரான லோகேஷ் கனகராஜ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களது வெற்றிக்கு கடவுள் துணை நிற்பார். அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் உடல் நலத்துடனும் நீண்ட காலம் நீங்கள் வாழ எனது வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் எப்போதும் நான் இருப்பேன் என்று பதிவிட்டு இருக்கிறார் சஞ்சய் தத். அதோடு லோகேஷ் உடன் இணைந்து தான் எடுத்த ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.










