வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காது என்ற விரக்தியில் அறுவடைக்கு தயாராக இருந்த இரண்டு ஏக்கர் வெங்காயப் பயிர்களை நாசிக்கைச் சேர்ந்த விவசாயி ஒருவர் டிராக்டர் ஏற்றி அழித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த மொத்த விற்பனைக் கூடங்களில் வெங்காயத்தின் மொத்த விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதன் எதிரொலியாக, நாசிக் அருகே நைடாலி (Naitale) கிராமத்தைச் சேர்ந்த 33 வயதான விவசாயி சுனில் போர்குடே. இவர் தான் பயிரிட்டிருந்த வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காது என்ற விரக்தியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 200 குவிண்டால் அளவிலான வெங்காயப் பயிர்கள் மீது நிலத்தை உழுவதற்கு பயன்படும் டிராக்டரை ஓட்டி அழித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் வெங்காயம் பயிரிட்டது முதல் இதுவரை ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவிட்டிருப்பதாக தெரிவித்த விவசாயி சுனில், அறுவடை செய்யவேண்டுமானால், டிராக்டர் வாடகை கூலி செலவு உள்ளிட்டவைக்களுக்காக, மேலும் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி வரும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், வெங்காயத்தின் மொத்த விலை பெருமளவு வீழ்ச்சி அடைந்து, குவிண்டால் 550 ரூபாய்க்கு மட்டுமே விலை போவதால், வெறும் 80,000 ரூபாய் மட்டுமே கிடைக்கும் சூழல் நிலவுவதாகக் கூறுகிறார். இதனால் வெங்காய பயிர்களை அறுவடைச் செய்யாமல், நிலத்திலேயே அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று வேதனையுடன் பயிர்களை அழித்துள்ளார்.
கடந்த வாரம் வியாழன்கிழமை அன்று சோலாப்பூரில் 512 கிலோ வெங்காயத்திற்கு அனைத்து செலவுகளும் கழித்து வெறும் 2 ரூபாய் மட்டுமே விவசாயியைக் கவலை அடையச் செய்தது.










