ஏகே 62 படத்தில் மீண்டும் அஜித்துக்கு வில்லனாக வரும் பிரபல நடிகர்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையொட்டி வெளியான ‘துணிவு‘ படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சானத்தை பெற்று வெற்றி பெற்றது. அதன் பின் ஏகே 62 படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்று கேள்வி எழுந்த நிலையில் அதை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியது. இந்நிலையில் அஜித், திரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்‘ படத்தில் விக்டர் என்ற வில்லன் வேடத்தில் நடித்தவர் அருண் விஜய். அதற்கு முன்பு அவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் தொடர்ந்து தோல்விகளை கொடுத்து வந்த நிலையில் வில்லனாக நடித்த இந்த படம் அருண் விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.

அதன் பிறகு அவரது ஹீரோ மார்க்கெட் சூடு பிடித்தது. அதோடு, மகிழ்திருமேனி இயக்கிய ‘தடம், தடையறத் தாக்க‘ போன்ற படங்களிலும் அருண் விஜய் தான் நாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஏகே 62 ஆவது படத்தின் வில்லனாக நடிப்பதற்கு அருண் விஜய்யிடம் மகிழ்திருமேனி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்