பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘தமிழன்‘ படத்தில் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் தற்போது தனது சினிமா வாழ்க்கை அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு பிடிக்காமலேயே ஒரு கேவலமான படத்தில் நடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. சில நேரங்களில் விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கதாநாயகிகள் குறிப்பிட்ட படங்களில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும். அதற்கு பெரிய இயக்குனர் அல்லது ஹீரோ காரணமாக இருக்கலாம்.
அந்த படத்தில் நடிக்க மறுத்தால் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி விழுந்து விடுமோ, வாய்ப்புகள் வராதோ என்ற பயமும் காரணமாக இருக்கும்.
நான் அப்படி ஒரு அருவருப்பான படத்தில் நடித்தேன். படத்தின் பெயரை குறிப்பிட முடியாது. அந்த படத்தில் நடிக்கும்போது என் மீது எனக்கே, கோபம் வெறுப்பு வந்தது. படப்பிடிப்பு அரங்கில் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டி வந்தது. எனக்கு கொடுத்த வசனங்கள் அவ்வளவு கேவலமாக இருந்தது. அறிவே இல்லாத வசனங்கள் அவை. செட்டில் ஒரு பொம்மை மாதிரி உட்கார்ந்திருப்பேன். அந்த படத்தை இப்போது நினைத்தாலும் அருவருப்பாக உள்ளது“ என்று கூறியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. அந்த படம் எது என்று தெரிந்தால் கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.










