கடந்த 2007-ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘சிவாஜி – தி பாஸ்‘. இப்படத்தை ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இப்படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் இப்படத்தில் ரகுவரன், விவேக், சுமன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இப்படம் அந்த காலகட்டத்தில் தமிழில் ரூ.100 கோடி வசூலித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த படத்தை தற்போது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தெலுங்கு பதிப்பில் திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளனர்.










