இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லெட்ஸ் கெட் மேரிட்‘. இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்‘ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் ‘லெட்ஸ் கெட் மேரிட்(L.G.M) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.
இது காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. இதில் ‘லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் நதியா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரது உள்ளங்களையும் கவர்ந்து வருகிறது.










