முகப்பு அண்மை செய்திகள் உக்ரைன் உடனான போரை நிபந்தனையுடன் நிறுத்த தயார்- விளாடிமீர் புதின்

உக்ரைன் உடனான போரை நிபந்தனையுடன் நிறுத்த தயார்- விளாடிமீர் புதின்

உக்ரைன் உடனான போரை நிறுத்த தயார், ஆனால் மற்ற நாடுகள் தலையிட கூடாது என புதின் நிபந்தனை விதிக்கின்றார்.

தோல்வியின் விளிம்பில் சொல்லும் சம்பிரதாய வார்த்தை என்று  ஜரோப்பிய நாடுகளால் அது அறிவிக்கபட்டாலும், ரஷ்யாவின் சில பலங்கள் அசாத்தியாமானவை என்பதால் அது கவனிக்கபட்டது.

காரணம் சாதரணமாக புதின் போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்லை, சாட்மெட் எனப்படும் அதன் மிக பேரழிவு ஏவுகணையினை தயார் படுத்தி விட்டுத்தான் அறிவித்தார். அது ஏவபட்டால் அடுத்த 7ம் நிமிடம் ஐரோப்பாவில் பல நாடுகள் இருக்காது எனும் அளவு அது பெரும் சக்திமிக்கது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு புதின் இறங்கி வந்த நிலையில் அதை வரவேற்கும் நாடுகள் அதே நேரம் புதின் நம்பமுடியாதவர், பேச்சுவார்த்தை என காலம் இழுத்து அந்த இடைவெளியில் பெரும் ஆயுதம் செய்து மீண்டும் போர் தொடங்குவார் என தயங்குகின்றன‌. அப்படியே மிக நம்பகமான நாட்டின் வாயிலாக இந்த பேச்சுவார்த்தை நடந்தால் வரவேற்போம் என ஐரோப்பிய நாடுகள் பச்சைக்கொடி காட்டுகின்றன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version