கடந்த இரண்டு நாட்களில் இந்தியாவுக்கு வந்த மொத்தம் 39 சர்வதேச பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் வந்தபோது பரிசோதிக்கப்பட்ட 6 ஆயிரம் பேர்களில் 39 சர்வதேச பயணிகள் கோவிட் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று அங்குள்ள சோதனை மற்றும் மருத்துவ வசதிகளை ஆய்வு செய்ய உள்ளார்.
மேலும், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள், தங்கள் விமானம் இந்தியாவுக்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன், நெகடிவ் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையைப் பெறுவதை இந்திய அரசு கட்டாயமாக்குகிறது. முன்னதாக, கிழக்கு ஆசியாவைத் தாக்கிய 30-35 நாட்களுக்குப் பிறகு கோவிட் – இன் புதிய அலை இந்தியாவைத் தாக்கியது முக்கியமானதாக கருதப்படுகிறது.
